අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාවஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுCOMMISSION TO INVESTIGATE ALLEGATIONS OF BRIBERY OR CORRUPTION

சாரதி (தரம் III) பதவிக்கான திறந்த ஆட்சேர்ப்பு – 2026

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 26(1) பிரிவின்படி இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

46வெற்றிடங்கள்
2026 ஒக்டோபர் 16இறுதித் திகதி
25 – 45வயதெல்லை
ரூ. 43,280ஆரம்பச் சம்பளம்

2023-ஆம் ஆண்டின் 9-ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 26(1) பிரிவின்படி, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் முதன்மை நிலை (தொழில்முறை) தரம் III சாரதி பதவியின் பணியிடங்களில் உள்ள 46 வெற்றிடங்களை நிரப்ப இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ள இலங்கை பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

1. ஆட்சேர்ப்புக்கு அவசியமான தகைமைகள்

1.1 கல்வித் தகைமைகள் : சிங்களம்/தமிழ் மொழி உட்பட ஆறு பாடங்களில் இரண்டு திறமைச் சித்திகளுடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாமல் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

1.2 தொழில் சார் தகைமைகள்: கனரக வாகனங்களை ஓட்டுவதற்காக மோட்டார் வாகன

போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தால் வழங்கப்பட்ட சாரதி அனுமதி பத்திரத்தினை பெற்றிருத்தல் வேண்டும்.

1.3 அனுபவம்: வாகன சாரதியான மூன்று ஆண்டுகள் (பகுதி/தொடர்ச்சியான) அனுபவம்

பெற்றிருத்தல் வேண்டும் (அனுபவச் சான்றிதழ்கள் மூலம் நிரூபிக்கப்படல் வேண்டும்).

1.4 உடல் சார் தகைமை: ஒவ்வொரு விண்ணப்பதாரரும் இலங்கையின் எந்தப் பகுதியிலும்

பணியாற்றுவதற்கும், பதவியின் கடமைகளை ஆற்றுவதற்கும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தகுதியுடன் இருத்தல் வேண்டும். இரவும் பகலும் நல்ல கண்பார்வை இருக்க வேண்டும், மேலும் அது மருத்துவச் சான்றிதழ் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும். 5 அடி உயரம் இருத்தல் வேண்டும்.

1.5 ஏனையவை : ஐ. இலங்கை பிரசையாக இருத்தல் வேண்டும்.

II. விண்ணப்பதாரர்கள் சிறந்த நன்னடத்தை உடையவர்களாக இருத்தல் வேண்டும்.

III. விண்ணப்பங்கள் கோரும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இறுதித்திகதியன்று, விண்ணப்பதாரிகள் பதவிக்கான ஆட்சேர்ப்புக்குத் தேவையான தகைமைகள் அனைத்து வகையிலும் பூர்த்தி செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

2. வயதெல்லை

3. சம்பளத் திட்டம்

ரூபா. 43280-10×490-10×540-10×590-12×630- ரூபா 67,040

அதன்படி, இந்தப் பதவிக்கான சம்பளக் குறியீடு AC-PL-3-2025 மற்றும் ஆரம்பச் சம்பளப் படிநிலை ரூபா. 43,280/- ஆகும். மேலும், 2026.03.17 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட, இப்பதவிக்குப் பொருந்தக்கூடிய இதர படிகளும் வழங்கப்படும். (2027.01.01-க்கு முன்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டால், சம்பள விகிதத்தின் அட்டவணை II-இன் படி சம்பளம் வழங்கப்படும். அதாவது, வழங்கப்படும் சம்பளம் ரூபா. 40,834.00 ஆக இருக்கும்.)

4. ஆட்சேர்ப்பு முறை

100 வீதம் திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும்.

4.1 தொழில்கல்விப் பரீட்சை மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகப்பரீட்சையை உள்ளடக்கியது.

4.1.1 தொழில்கல்விப் பரீட்சை:

புள்ளி வழங்கப்படும் தலைப்புகள்உச்சப் புள்ளிகள்சித்திப்புள்ளிகள்
ஓட்டுநர் திறன்4020
நெடுஞ்சாலைப் போக்குவரத்து விதிகள் குறித்த நடைமுறை அறிவு4020
மோட்டார் இயந்திரவியல் விஞ்ஞானம் குறித்த அடிப்படை அறிவு2010

4.1.2. தொழிற்கல்வி நேர்முகத்தேர்வு சபை பின்வரும் அதிகாரிகளை உள்ளடக்குதல் வேண்டும்:

4.1.3 கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு :

மதிப்பெண்கள் வழங்கப்படும் முக்கிய விடயங்கள்உச்சப்புள்ளிகள்தெரிவு செய்வதற்கு பரிசீலிக்கப்படும் ஆகக்குறைந்த புள்ளிகள்
மேலதிக கல்வித் தகைமைகள்2060
மேலதிக சேவை அனுபவம்15
ஏனைய மொழித் தேர்ச்சி10
விடய அறிவு25
நேர்காணல் திறன்கள்30
மொத்த புள்ளிகள்100

4.1.4 கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு சபை மூன்று அங்கத்தவர்களை கொண்டது.

4.1.5

5. சேவையில் உள்ளீர்ப்பதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

6. விண்ணப்பதாரர்களின் ஆளடையாளம்

அ) ஆட்பதிவு ஆணையரால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை

ஆ) செல்லுபடியாகும் கடவுச்சீட்டு

இ) செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம்

7. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முறை.

அ) தேசிய அடையாள அட்டையின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி

ஆ) பிறப்புச் சான்றிதழின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி

இ) மேற்படி விண்ணப்பதாரியின் கல்வித் தகுதிகள் தொடர்பான சான்றிதழ்களின்

அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதிகள்

ஈ) மேற்படி விண்ணப்பதாரியின் தொழிற் கல்வித் தகுதிகள் தொடர்பான சான்றிதழ்களின்

அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதிகள்

உ) மேற்படி விண்ணப்பதாரியின் அனுபவத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களின்

அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதிகள்.

ஊ) விண்ணப்ப முடிவுத்திகதிக்கு முன் ஒருமாதகாலத்திற்குள் பெற்றுக் கொண்ட மருத்துவ

சான்றிதழ்களின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதிகள்

எ) சமீபத்திய 2 நன்னடத்தைச் சான்றிதழ்களின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதிகள்

குறிப்பு: விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதிகளை சரிபார்ப்பதற்காக, நேர்முகத்தேர்வின் போது தொடர்புடைய ஆவணங்களின் மூலப்பிரதிகள் சமர்ப்பிக்கப்படல். வேண்டும்.

9. தவறான தகவல்களை வழங்குதல்.

ஆட்சேர்ப்புக்கு முன்னர் உங்கள் விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட ஏதேனும் தகவல் தவறானது அல்லது பிழையானது எனக் கண்டறியப்பட்டால், உங்கள் பரீட்சார்தி தகுதி ரத்து செய்யப்படும். ஆட்சேர்ப்புக்குப் பிறகு அத்தகைய தவறான அல்லது பிழையான தகவல் கண்டறியப்பட்டால், தொடர்புடைய நடைமுறைகளுக்கு உட்பட்டு உங்களைப் பணியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

10. வெற்றிடங்களை நிரப்புவது/நிரப்பாமல் விடுவது குறித்த இறுதி முடிவு, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும்.

11. ஆட்சேர்ப்பு சம்பந்தமாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் முடிவே இறுதியானது.

12. இந்த வர்த்தமானி அறிவிப்பின் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுக்கிடையே ஏதேனும ஒவ்வாமை அல்லது வேறுபாடு இருப்பின், சிங்கள உரையே மேலோங்கும்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் கட்டளையின் பிரகாரம்.

ஆர்.எஸ்.ஏ. திசாநாயக்க,

பணிப்பாளர் நாயகம்

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

தபால் பெட்டி இல : 1431,

36, மலலசேகர மாவத்தை,

கொழும்பு 07.

விண்ணப்பப் படிவம்

திரையிலேயே ஆங்கிலப் பெரிய எழுத்துகளில் நிரப்பவும்; அல்லது அச்சிட்டு கையால் நிரப்பவும். (விண்ணப்பம் ஆங்கிலத்தில் நிரப்பப்பட வேண்டும்.)

(For office use only)

Commission to Investigate Allegations of Bribery or Corruption

Application for Recruitment to the Post of Driver (Grade III) on Open Basis

Medium
Sinhala
Tamil
English

(Application should be filled in English block capitals)

1.01.1 Full Name
1.2 Full Name (Sinhala/Tamil)
1.3 Name with Initials
2.02.1 Permanent Address
2.2 District
2.3 Province
3.03.1 Gender
3.2 National Identity Card Number
4.04.1 Mobile Telephone No./WhatsApp No.
4.2 Fixed Telephone No.
4.3 E-mail Address
5.05.1 Date of Birth
5.2 Age as at the Closing Date of ApplicationsYears Months Days
6.06.1 Marital Status
7.07.1 Height
8.08.1 Nationality
9.09.1 Religion

10.0 Educational Qualifications: Language medium:

G. C. E. (Ordinary Level)    Year :     Index No.
SubjectGradeSubjectGrade

11.0 Professional Qualifications:

12.0 Service Experience:-

InstitutionDuration (Number of years)

13.0 Additional Educational Qualifications:

Eg. G. C. E. Advanced Level ExaminationSchool/InstitutionResults

14.0 Language Proficiency:

LanguageDocuments that can be produced to prove the qualification
(a) Sinhala Language
(b) Tamil Language
(c) English Language
(d) Other foreign languages

15.0 Other Qualifications:

16.0 Declaration by Applicant:

I declare that the information provided in this application is true and correct to the best of my knowledge. I am aware that the Commission to Investigate Allegations of Bribery or Corruption reserves the right to cancel my candidature/appointment if any information furnished herein is found to be false or incorrect before or after recruitment.

I agree to abide by the rules and regulations related to this appointment and to accept any decision taken in respect of the cancellation of my candidature/ or appointment, in case I am found to be unqualified in terms of the applicable rules and regulations.

Signature of Applicant

17.0 Attestation of Signature:

I certify that Mr. who submits this application is known to me personally and that he placed his signature in my presence on .

Signature and official seal of the Attesting Officer
Full Name of the Attesting Officer:
Designation:
Address:
Date: